8th of May 2014
சென்னை::கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின்
படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்று வந்தது.
ஆனால், மொத்த காட்சிகளையும அவுட்டோரிலேயே படமாக்கியதால், அங்கு
ரசிகர்களின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருந்ததாம்.
இதனால் பப்ளிக்கிற்கு இடையூறுகள் ஏற்படும் சூழ்நிலைகள்
அதிகரித்திருக்கிறது.
இதனால் படப்பிடிப்பில்
கவனம் செலுத்துவதை விட ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றுவதே பெரிய வேலையாகி
விட்டதாம். அதனால்தான், திடீரென்று படப்பிடிப்பை நிறுத்திய கெளதம்மேனன்,
இனிமேல் அவுட்டோரில் படமாக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும இன்டோரிலேயே
படமாக்கி விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
அதனால்,
இப்போது அஜீத் படத்திற்காக சென்னையில் பிரமாண்டமான செட் அமைக்கும்
வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது,.அதனால்தான் அந்த வேலை
முடிவதற்குள், பாடல் ரெக்கார்ட்டிங்கை முடித்து விடலாமே என்று அஜீத்,
கெளதம்மேனன் இருவரும் ஹாரிஸ் ஜெயராஜ் ரெடி பண்ணி வைத்திருந்த டியூன்கள்
மொத்தத்தையும் கேட்டு நல்லதாக செலக்ட் பண்ணி அவற்றை ரெக்கார்ட்டிங்
செய்யும் வேலைகளில் இறங்கி விட்டனர்...
Comments
Post a Comment