- Get link
- X
- Other Apps
9th of May 2014
சென்னை::46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ்
திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர்
மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா
லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.
2008இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர்
சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார்.
சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும்
சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி. ஆனால் தற்போது 46 வயதான
ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் 4 மாத
கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஊர்வசியின் இரண்டாவது கணவர் சிவபிரசாத், மனைவி ஊர்வசியின் கர்ப்பம்
குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம் ஊர்வசியும், மிக விரைவில் நல்ல செய்தி கூறுகிறேன் என்று
தெரிவித்திருக்கிறாராம்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment