15th of May 2014
சென்னை::தமிழில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு 30 நபர்கள் கொண்ட தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாலிவுட் ஸ்டார்கள் என்றாலே பாதுகாப்பு இல்லாமல் வெளியில் வருவதில்லை. அந்த பாணி தற்போது தமிழ் சினிமாவிலும் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க வந்த ஒரு நிகழ்ச்சியில் பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்களையும், ரசிகர்களையும் அருகில் அண்டவிடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி சிவ கார்த்திகேயன் கூறும்போது, ‘எனக்கு செக்யூரிட்டி யாரும் கிடையாது. தனியாகத்தான் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன். குறிப்பிட்ட சம்பவத்தன்று பட தயாரிப்பாளர் செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடு என் மீது பழியாக விழுந்துவிட்டது என்றார்.இந்நிலையில் மைசூரில் நடந்த ‘லிங்கா‘ பட ஷூட்டிங்கில் ரஜினியுடன் பங்கேற்று நடித்து வந்தார் சோனாக்ஷி சின்ஹா. ஏற்கனவே கன்னட அமைப்பு ஒன்று ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் 100 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
தவிர சோனாக்ஷிக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு அளிக்க 30 செக்யூரிட்டிகளும் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டனர். மைசூரில் ஷூட்டிங் முடிந்து இம்மாத இறுதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. அங்கும் சோனாக்ஷிக்கு தனியார் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது....

Comments
Post a Comment