2 ஸ்டேட் ரீமேக்கில் ஷ்ருதி ஹாஸன்?!!!

26th of May 2014
சென்னை::
பாலிவுட்டில் மாபெரும் வெற்றிப்பெற்ற படம் 2 ஸ்டேட். இந்த படத்தின் ரீமேக் உரிமையை பி.வி.பி நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இவர்கள் தயாரிக்க போவதாக ஒரு வதந்தி வந்து கொண்டிருக்கிறது.
 
மேலும் இதில் ஷ்ருதி ஹாஸன் தான் அலியா பட் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் கூறி வந்த நிலையில், தற்போது இதற்கு ஷ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.
 
இதை தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ‘நான் எந்த படத்தில் நடித்தாலும் உங்களுக்கு கண்டிப்பாக சொல்வேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்...

Comments