விஸ்வரூபம்-2 இந்த வருடத்திற்குள் வெளிவருகிறதோ இல்லையோ, உத்தமவில்லனும், த்ரிஷ்யம் ரீமேக்கும் இந்த ஆண்டில் கண்டிப்பாக வெளிவந்துவிடும்!!!

23rd of May 2014
சென்னை::விஸ்வரூபம் படத்தையடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் உடனடியாக இயக்கினார் கமல். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டதால் ரஜினியின் கோச்சடையானைப்போலவே மே மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து உத்தமவில்லனில் இறங்கினார் கமல்.
 
தற்போது அப்படத்தின் படப்பிடிப்புகூட முக்கால்வாசி முடிந்து விட்டது. ஆனபோதும், இன்னமும் விஸ்வரூபம்-2 வெளிவருவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இதுபற்றி அப்பட வட்டாரத்தை விசாரித்தபோது, அனிமேஷன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இதே பதிலைத்தான் பல மாதங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில், உத்தமவில்லனை முடித்துவிட்டு விஸ்வரூபம்-2 பட வேலைகளில் கமல் மீண்டும் இறங்கயிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், மலையாள த்ரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பவர்களோ, உத்தமவில்லனை முடித்ததும் எங்கள் படத்துக்கு கமல் கால்சீட் கொடுத்திருக்கிறார். அதனால், நாங்கள் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட்டு விடுவோம் என்கிறார்கள்.
 
ஆக, விஸ்வரூபம்-2 இந்த வருடத்திற்குள் வெளிவருகிறதோ இல்லையோ, உத்தமவில்லனும், த்ரிஷ்யம் ரீமேக்கும் இந்த ஆண்டில் கண்டிப்பாக வெளிவந்துவிடும் என்று தெரிகிறது...

Comments