சென்னை::(நியூயார்க்) உலக பணக்கார நடிகர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் ஜானி டெப் இருவரையும் பின்னுக்கு தள்ளி 2வது பெரும் பணக்காரர் இடத்தை பிடித்தார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 48 வயது. இதுவரை பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஐபிஎல் டீம் ஒன்றின் ஓனராகவும் இருக்கிறார்.
தமிழிலும் ஹே ராம், உயிரே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இவர் 2ம் இடத்தை பிடித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,515 கோடி. இவருக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவரது சொத்து மதிப்பு 480 மில்லியன் டாலர். (ரூ.2,812 கோடி).
முதலிடத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி சென்பில்டு உள்ளார். இவரது சொத்து மதிப்பு 820 மில்லியன் டாலர் (ரூ.4,804 கோடி). டைலர் பெர்ரி மற்றும் ஜானி டெப் இருவரும் 4வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் சொத்து மதிப்பு தலா 450 மில்லியன் டாலர் (ரூ.2,636 கோடி). இந்த தகவலை சர்வ«தச புள்ளிவிவர சேகரிப்பு அமைப்பு ஒன்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது...
Comments
Post a Comment