ஜூம் என்ற நிறுவனம் நடத்தியுள்ள, ரசிகர்கள் விரும்பும் நடிகர்கள் பட்டியலில் 25ம் இடத்தை பிடித்துள்ளார் தனுஷ்: அவருக்குஅடுத்தபடியாக 27வது இடத்தை பிடித்திருக்கிறார் அஜீத் !!!

23rd of May 2014
சென்னை::தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களே பாராட்டி வரும் ஒரு நடிகர் யார் என்றால் அது தனுஷ் மட்டுமே. ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இவரை, ஒரு மேடையில் தன்னை வியக்க வைத்த ஒரு சிறந்த நடிகர் என்று விஜய்யே பாராட்டினார். அதுவும் அவரை தன் எதிரே வைத்துக்கொண்டு அந்த வார்த்தையை விஜய் சொன்னதால், சந்தோசத்தில் திக்குமுக்காடி திணறிப்போய் அமர்ந்திருந்தார் தனுஷ்.
 
அதையடுத்து, விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல்வேளையாக, தனது டுவிட்டரில், விஜய் அண்ணனின் பாராட்டு பெருமையாக உள்ளது. ஆனால், நான் அவரைவிட ஒன்றும் பெரிய நடிகன் இல்லை என்று தன்னடக்கத்தோடு தனது கருத்தை பதிவு செய்திருந்தார் தனுஷ்.
 
அப்படிப்பட்ட தனுஷ், ஜூம் என்ற நிறுவனம் நடத்தியுள்ள, ரசிகர்கள் விரும்பும் நடிகர்கள் பட்டியலில் 25ம் இடத்தை பிடித்துள்ளார். அவருக்குஅடுத்தபடியாக 27வது இடத்தை அஜீத் பிடித்திருக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் ராம்சரண் 23வது இடத்தை பிடித்துள்ளாராம்.
 
மொத்தம் 50 இந்திய நடிகர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களில் 21 முதல் 50 பேர் கொண்ட பட்டியல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் முதல் 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாம்...

Comments