2nd of May 2014
சென்னை::நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவியின நடிப்பில் வெளியாக
தயாராகி வரும் படம் பூலோகம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்
த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பாக்சராக ஜெயம்
ரவி நடிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் வில்லன் நாதன்ஜோன்சும் ஒரு பாக்சராக
நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டரை
ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்த படத்துக்காக முறைப்படி பாக்சிங் பயிற்சி
எடுத்ததோடு, உடல்கட்டையும் மாற்றி நடித்துள்ளார் ஜெயம்ரவி. ஏற்கனவே
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்திலும் பாக்சராக அவர்
நடித்திருந்தபோதும், இந்த படத்துக்காக இன்னும் கூடுதல் பயிற்சி பெற்று
நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில்
நடித்திருக்கும் நாதன்ஜோன்ஸ்க்கு சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து
கொள்ள மட்டுமே ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். ஆக, 15
கோடிக்குள் முடிக்க போடப்பட்ட பட்ஜெட் இப்போது 24 கோடியில் போய்
நிற்கிறதாம். ஜெயம்ரவியின் வியாபார வட்டத்தைப்பார்க்கையில் இது பெரிய தொகை
என்கிறார்கள். தற்போது படம் சென்சாருக்கு சென்று வந்துவிட்ட நிலையில்,
வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. கோச்சடையான் ரிலீசைத் தொடர்ந்து மே
மாதத்தில் பூலோகம் திரைக்கு வருகிறதாம்..
Comments
Post a Comment