28th of May 2014
சென்னை::சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் கலக்கியெடுத்து விட்டது. ஆனால் தான் ஒரு ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற நினைப்பை தலைக்கு ஏற்றாமல் மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார் சந்தானம்.. அதுவும் யாருடன்..? சூப்பர்ஸ்டாருடன்..
கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் ‘லிங்கா’ படத்தில் நடிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டுவித கெட்டப்புகள்.. இதில் இளமையான ரஜினிக்கு நண்பராக நடிக்கிறார் சந்தானம். குசேலன், எந்திரனை தொடர்ந்து மூன்றாவதாக ரஜினி படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பதும் அத்துடன் கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனிலும் முதல் முறையாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஸ்பென்ஸ் திகில், த்ரில் என மிரட்டல் கலவையாக உருவாகிவரும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அனேகமாக வரும் ஜூன் -23ஆம் தேதி ரஜினியுடன் ‘லிங்கா’ படப்பிடிப்பில் சந்தானம் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது...
Comments
Post a Comment