27th of May 2014
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவிகிதம் முடிந்துவிட்டது. மீதி காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வர, படத்தின் ஃபஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதை இப்போது அதிகாரபூர்வமாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், இசை அமைப்பாளர் அனிருத்தும் தங்களது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதி செய்துள்ளனர். இதனால் இந்த வருட விஜய்யின் பிறந்த நாள், அவரது ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ ஆக அமையப்போகிறது. ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மீண்டும் இணைந்துள்ள ‘கத்தி’ படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. தீபாவளி வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் சமந்தா என்பது எல்லோருக்கும் தெரியுமே!.....
Comments
Post a Comment