தேர்தல் 2014 : நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி!!!

21st of May 2014
சென்னை::நடைபெற்று முடிந்த பாராளுமன்ற, தெலுங்கானா, சீமாந்திரா மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து எந்த நட்சத்திரங்களும் தேர்தலில் போட்டியிடவில்லை.
 
ஆனால், தமிழில் நடித்துள்ள மற்றும் அக்கம் பக்கத்து மாநில நட்சத்திரங்கள் சிலர்  போட்டியிட்டார்கள்.
 
அவர்களில் சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் அடைந்துள்ளார்கள்.
சீமாந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில், நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார்.
தெலுங்கு தேசம் சார்பாக  இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார்.
 
தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நடிகை ஜெயசுதா தோல்வியடைந்துள்ளார்.
அதே மாநிலத்தில் மேடக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆக்ஷன் ஹீரோயினாக புகழ் பெற்று விளங்கிய நடிகை விஜய் சாந்தி தோல்வியடைந்தார்.
 
அந்தோல் தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பாக போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் பாபு மோகன் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜமுந்திரி பாராளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பாக போட்டியிட்ட நடிகர் முரளி மோகன் வெற்றி பெற்றுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜோர் பாராளுமன்றத் தொகுதியில் ராஷ்ட்ரிய லோக்தள் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நடிகை நக்மா சுமார் 12000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நடிகை ரம்யா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 
ஆக, நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தல் ஒரு பக்கம் இருட்டாகவும் மறுபக்கம் ஒளி வீசும் விதத்தில்தான் அமைந்துள்ளது....

Comments