3rd of May 2014
சென்னை::அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதன் மூலம்
சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்' புதிய வரலாறு படைக்கிறது.
அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ்
எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும்
வெளியிடுகின்றன.
தமிழ் மொழியில் மட்டும் கோச்சடையான் 100 திரையரங்குகளுக்கும் அதிகமாக அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. முன்னதாக எந்திரன் 85 அரங்குகளில் வெளியானது. இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் முந்தய சாதனையை அவரே முறியடிக்கிறார். 78 அரங்குகளில் வெளியான அஜீத்தின் ஆரம்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அட்மஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் வெளியிட்ட ஜில்லா மற்றும் வீரம் தலா 70 அரங்குகளில் வெளியானது. முன்னதாக, சூர்யாவின் சிங்கம் 2 படத்துக்கு 63 திரையரங்குகள் கிடைத்தன..
Comments
Post a Comment