தமிழுக்கு எண் -1ஐ அழுத்தச் சொல்லும் பிந்துமாதவி!!!

23rd of May 2014
சென்னை::ரசிகர்கள் அடிக்கடி கேட்ட வார்த்தையாகவோ அல்லது வாக்கியமாகவோ பெயர் வைப்பதுதான் படத்தின் பப்ளிசிட்டிக்கான முதல் வழி என புரிந்துகொண்ட புதிய இயக்குனர்களில் ஒருவர் தான் ராம் பிரகாஷ் ராயப்பா.. ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர், தற்போது தான் இயக்கி வரும் புதிய படத்துக்கு வைத்திருக்கும் தலைப்பு தான் ‘தமிழுக்கு எண் -1ஐ அழுத்தவும்’..
 
பூமியை நோக்கிவரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்கிற புதுமையான கதைக்களத்தை இந்தப்படத்திற்காக எடுத்துள்ளார் இயக்குனர் ராயப்பா.. இந்தப்படத்தில் நகுலும் அட்டகத்தி’ தினேஷும் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாகளாக பிந்துமாதவி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்கள்.
 
எதிர்நீச்சல் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் இசைவெளியீட்டு விழாவை ஜூனில் நட்த்த திட்டமிட்டுள்ள படக்குழுவினர் ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளனர்....

Comments