26th of May 2014
சென்னை::நல்ல சினிமாவை ஆதரிப்பவர், ஆராதிப்பவர் பிரகாஷ்ராஜ். தன்னுடைய டூயட் மூவிஸ் பேனரில் அவர் தயாரித்த அத்தனை படங்களுமே ஆரோக்கியமான திரைப்படங்களே. நல்ல சினிமாவை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே நடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு படங்களைத் தயாரிப்பார் பிரகாஷ்ராஜ்.

அதுமட்டுமல்ல, பிரகாஷ்ராஜ்
சிறந்த படம் என்று நம்பிய அரவான் படம் தயாரிப்புநிலையில் இருந்தபோது
மிகப்பெரிய பணச்சிக்கலை சந்தித்தது. அதனால் அரவான் படம் வெளிவருவதில்
தடங்கலும் ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ், ஹைதராபாத்திலிருந்து
கிளம்பி வந்து அரவான் படத்தின் தயாரிப்பாளர் சிவாவிடம் ஒரு கோடி ரூபாயைக்
கொடுத்துவிட்டு, படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப்போனார்.
அப்படிப்பட்ட
பிரகாஷ்ராஜுக்கு பார்த்திபன் மீதும், அவரது படங்கள் மீதும் மிகப்பெரிய
மரியாதை உண்டு. பார்த்திபனுக்கு சரியான படங்கள் அமையவில்லை என்பதைக்
கேள்விப்பட்டு, புதுமுகங்களை வைத்து எடுப்பதுபோல் ஒரு சப்ஜெக்ட்டோடு
வாருங்கள். உங்களுக்கு ஒரு கோடி சம்பளம் தந்து அந்தப் படத்தை நானே
தயாரிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தத் தகவலை சொல்லி
புளகாங்கிதப்படுகிறார் பார்த்திபன்...
Comments
Post a Comment