23rd of May 2014
சென்னை::அட்ட கத்தி' தினேஷும், நகுலும் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வி.எல்.எஸ் ராக் சினிமா நிறுவனம் சார்பில் வி.சந்திரன் தயாரிக்கும் இப்படம், கதல், திரில்லர், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அணைத்து கலவைகளையும் கொண்ட படமாக உருவானாலும், மற்ற கமர்ஷியல் படங்களைப் போல் அல்லாது சிறிது வித்தியாசப்படும், என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா. எங்கேயும் எப்போதும் சரவணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், பல விளமப்ரப் படங்களை இயக்கியுள்ளார். இது தான் முதல் திரைப்படம்.
பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கபப்டுகிறது. இதனால், இப்படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதே கதை.
தினேஷ், நகுல் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக பிந்து மாதவி, புதுமுகம் ஐஸ்வர்யா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். இவர்களுடன் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், அனைவருக்கும் சமமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு தீபக்குமார் பாதி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜூன் மாதத்தில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் படம் வெளியாகிறது....

Comments
Post a Comment