10 கிலோ எடை குறைந்த வரலட்சுமி!!!

9th of May 2014
சென்னை::இயக்குனர் பாலா படத்திற்காக வரலட்சுமி பத்துகிலோ எடை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதுகிறார்.
வரலட்சுமியை நாயாகியாக ஒப்பந்தம் செய்த பாலா, அவருக்கு போட்ட முதல் கண்டிஷன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதுதான். பொதுவாகவே, வரலட்சுமி நல்ல உயரமும் அதற்கேற்ற எடையுமாய் இருப்பார். ஆனால் பாலா படத்திற்காக இரவும் பகலும் கரகாட்டம் பயின்றதோடு உடல் எடையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
அதன் பயனாக தற்போது பத்து கிலோ எடையை குறைத்து விட்டாராம் வரலட்சுமி. படத்திற்கான மற்ற நடிகர்களுக்காக தேர்வும், ஒத்திகையும் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் நடக்கலாம் எனத் தெரிகிறது. பிரமாண குலத்தில் பிறந்த தவில் கலைஞர் சசிகுமாருக்கும், தாழ்ந்த குலத்தில் பிறந்த கரகாட்டக்காரி வரலட்சுமிக்கும் ஏற்படும் காதல்தான் கதையாம்....
 

Comments