ll
8th of May 2014
சென்னை::படத்தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் ஏற்கனவே கும்கி, கேடிபில்லா கில்லாடி ரங்கா, சூதுகவ்வும் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது. தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தையும் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது.
பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஸ்னா ஜாவேரி நடித்துள்ளார். படத்தை காமெடி நடிகரான ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை மே-10ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே இருப்பதால் இதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கியுள்ளது ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.
சில முடிவுகள் திடீர் திடீரென எடுக்கப்படுவதுண்டு. ஆனால் அது நல்லபடியாக முடியும். அப்படித்தான் இப்போது ஸ்டுடியோகிரீன் நிறுவனம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை வாங்கி வெளியிடுவதும். கோடைவிடுமுறையில் இளைஞர்களையும் குழந்தைகளையும் குஷிப்படுத்த களம் இறங்கிவிட்டார் சந்தானம்....
Comments
Post a Comment