லிப் லாக் காட்சிகளில் நடிக்க கூடுதலாக 10 லட்சம் கொடுங்கள் ஜமாய்ச்சிடுவோம்: லட்சுமிமேனன்!!!

24th of May 2014
சென்னை::9ம் வகுப்பு படித்தபோதே கும்கி படத்தில் நடித்தவர் கேரளத்தைச்சேர்ந்த லட்சுமிமேனன். அந்த படத்தில் குடும்பப்பாங்காக நடித்த அவர் பின்னர் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக அதே கிராமிய மணம் மாறாமல் நடித்தார். ஆனால் விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் என்ட்ரி கொடுத்தபோதுதான் அவரது கேரியரே மாறியது.
 
அந்த படத்தில குத்துப்பாட்டு நடிகைகள் போன்று குத்தாட்டம் போட்ட லட்சுமிமேனன், அதே விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில லிப்லாக் காட்சியிலும் நடித்து தனது குடும்ப இமேஜை உடைத்தெறிந்தார். அதோடு, விஷாலுக்கு மட்டும் இந்த சலுகை இல்லை. கதைக்கு அவசியம் என்றால் இனி முத்தக்காட்சிகளில் நடிப்பேன் என்றும் ஸ்டேட்மென்ட் விட்டார்.
 
அதையடுத்து, கதைகளுடன் அவரை முற்றுகையிட்ட மேலும் சில டைரக்டர்களும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த, அப்படியென்றால் கூடுதலாக 10 லட்சம் கொடுங்கள் ஜமாய்ச்சிடுவோம் என்று லட்சுமிமேனன் சொன்னார். அதற்கும் உடன்பட்டு சில படாதிபதிகள் லட்சுமிமேனனை புக் பண்ணியுள்ளனர்.
 
ஆனால் இந்த நேரத்தில, சில ஹீரோக்கள் லட்சுமிமேனனுக்கு போன் போட்டு, உன்னை ஒரு முத்தம் கொடுக்கக்கூட 10 லட்சம் கேட்குறியாமே. அத்தனை காஸ்ட்டிலியா நீ என்று கலாய்க்கிறார்களாம். இதனால் கடுப்பில் இருக்கும் லட்சுமிமேனன், என் முத்தம் காஸ்டிலியானதுன்னுதானே 10 லடசம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர்றாங்க அப்புறமென்ன உங்களுக்கு சந்தேகம் என்று வெடுக்கென்று பேசிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறாராம்.....

Comments