100 நாள்களை கடந்த 'கோலிசோடா'!!!

3rd of May 2014
சென்னை::பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் 'கோலிசோடா'. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில், குறைந்த முதலீட்டில் உருவான இப்படம், சமீபத்தில் மெகா ஹிட் படமான படங்களில் முன்னணியில் உள்ளது.

தற்போதைய கால்கட்டத்தில் ஒரு படம் 10 நாள்கள் முதல் 25 நாள்கள் ஓடினாலே அப்படம் பெறிய வெற்றிப் படமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், கோலிசோடா படம் தற்போது 100 நாள்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று இப்படம் தனது 100வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிட்டார்..

Comments