3rd of May 2014
சென்னை::ஹீரோ, ஹீரோயின்கள் பாணியில் 10 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் இயக்குனர். ‘வைகாசி பொறந்தாச்சி‘ படம் மூலம் பிரசாந்த், ‘வைதேகி வந்தாச்சி‘ படம் மூலம் சரவணனை அறிமுகப்படுத்தியதுடன் ‘கிழக்கே வரும்பாட்டு‘, ‘காற்றுள்ளவரை‘, ‘அக்கரை சீமையிலே‘ படங்களை இயக்கியவர் ராதாபாரதி.
10 ஆண்டுக்கு பிறகு ‘நண்பர்கள் நற்பணி மன்றம்‘ என்ற படம் இயக்கி ரீ என்ட்ரி ஆகிறார்.இதுபற்றி ராதாபாரதி கூறும்போது,‘சினிமாவில் ரீ என்ட்ரி என்பது கிடையாது. சினிமாதான் வாழ்க்கை. காதலை மையமாக வைத்தே படங்களை இயக்கினேன். இதிலும் காதல்தான் கரு. ஊருக்கு வரும் பிரச்னை நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தீர்க்கிறார்கள்.
அவர்களுக்கு காதல் பிரச்னையை ஊர் தீர்க்கிறதா என்பது கதை. ஜெய்நாத் ஹீரோ. அக்ஷயா ஹீரோயின். இமான் அண்ணாச்சி, அன்பாலயா பிரபாகரன், நரேன், சிங்கம்புலி, சார்மிளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசை. வி.செல்வா ஒளிப்பதிவு. சி.மாதையன் தயாரிப்பு‘ என்றார்..
Comments
Post a Comment