16th of May 2014
சென்னை::ரஜினி – தீபிகா படுகோனே நடித்துள்ள படம் தான் ‘கோச்சடையான்’.
3டி மோசன் கேப்சர் டெக்னாலஜியில் தயாராகியுள்ள இப்படத்தை ரஜினியின் மகளான செளந்தர்யா டைரக்ட் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி ரிலீசாக இருந்த இப்படம் பல தடைகளையும் தாண்டி வருகிற 23-ஆம் தேதி உலகமும் முழுவதும் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தற்போது ‘கோச்சடையான்’ படத்துக்காக தயாரித்து வெளியிடப்பட்ட Kochadaiiyaan The Legend: Kingdom Run’ and ‘Kochadaiiyaan The Legend: Reign of Arrows’ ஆகிய இரண்டு மொபைல் கேம்கள் மிகப்பெரிய சாதனையைப் பெற்றுள்ளது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐ ஒ.எஸ், விண்டோஸ் ஆகிய மூன்று இயங்கு தளங்களில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட இந்த கேம்களை வெளியான இரண்டே மாதங்களில் சுமார் 1 மில்லியன் ரசிகர்கள் டவுண்லோடு செய்துள்ளனர்.
இது தமிழ்ப்பட ஹீரோக்களில் வேறு எந்த ஒரு ஹீரோவும் செய்யாத மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது...
Comments
Post a Comment