Yatchan Movie Pooja Stills!!! ‘யாட்சன்’ – விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா!!!

21st of April 2014
சென்னை::திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ உட்பட தமிழில், “பொய் சொல்லப் போறோம், உன்னைப் போல் ஒருவன், தெய்வ திருமகள்>>>
21st of April 2014
சென்னை::திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ உட்பட தமிழில், “பொய் சொல்லப் போறோம், உன்னைப் போல் ஒருவன், தெய்வ திருமகள், முரண், கலகலப்பு, தாண்டவம், முகமூடி, வழக்கு எண் 189, வேட்டை, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு,” உட்பட பல படங்களை மற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து வெளியிட்ட யு டிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள படம் ‘யாட்சன்’.
 
தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘புறம்போக்கு, அஞ்சான், சிகரம் தொடு’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘யாட்சன்’ படத்தை விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து  தயாரிக்கிறது.
‘யாட்சன்’ என்றால் பொம்மைகளை வைத்துக் கொண்டு மகிழ்ச்சிப்படுத்துபவர் என்று பொருள்.
‘அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா 2007, ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் இது.
 
இவருடைய இயக்கத்தில் ஆர்யா, ஐந்தாவது முறையாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் கிஷோர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இரு முன்னணி ஹீரோயின்கள் ஆர்யா, கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
 
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி இளையராஜா அரங்க அமைப்பு பணிகளை செய்கிறார்.
இப்படத்தின் கதையை  ‘அயன், கோ, மாற்றான், ஆரம்பம், ஐ’ படங்களின் வசனகர்த்தாவான இரட்டை எழுத்தாளர்களான சுபா எழுதியுள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
 
யாட்சன் படம் ஒரு நகைச்சுவை கலந்த காதல் படம். ஒரு சுவாரசியமான கதை கொண்ட இப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா இருவரும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். அவருடைய இயக்கத்தின் மீதும், பரபரப்பான திரைக்கதை மீதும் நாங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக இந்த படம் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும்,”என்கிறார் ஜி.தனஞ்செயன் – தென்னிந்திய தலைமை வர்த்தகம் - யு டிவி – ஸ்டுடியோ டிஸ்னி இந்தியா.
“யு டிவி மோஷன் பிக்சர்ஸ் போன்ற சிறப்பான ஒரு நிறுவனத்துடன் எனது முதல் தயாரிப்புடன்,  நான் இயக்கமும் செய்யவிருப்பது பெருமையாக உள்ளது. மிகவும் பிரமாதமான கதையுடன் ஆர்யா, கிருஷ்ணா ஆகியோருடனும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனும், மற்ற நடிகர்களுடனும் எங்களது குழு ஒரு சிறந்த மாபெரும் வெற்றிப் படத்தைத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது, ” என்கிறார் விஷ்ணுவர்தன்.
 
அடுத்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.
 

Comments