Vijay Meet Narendra Modi Photos!!! விஜய்க்கு மோடி தான் குருவாம்: மோடியை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்! ரஜினி பாணியில் சொன்ன விஜய்!!!

17th of April 2014
சென்னை::பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வப்போது சில சினிமா நடிகர்களையும் சந்தித்து வருகிறார்:பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று விஜயை சந்தித்...

Tags : Vijay Meet Narendra Modi Stills, Vijay Meet Narendra Modi Gallery, Vijay Met Narendra Modi at Coimbatore images, Vijay With Narendra Modi Pictures, Actor Vijay Support Narendra Modi Photos, Vijay Campagain For Narendra Modi Stills

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வப்போது சில சினிமா நடிகர்களையும் சந்தித்து வருகிறார்.

அதன்படி, நாகர்ஜூனா, பவன் கல்யாண், ரஜினிகாந்த் என்று சந்தித்தவர், நேற்று விஜயை சந்தித்தார். கொயமத்தூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று விஜய் கூறியுள்ளார்.

ஆனால், நரேந்திர மோடியை நடிகர் விஜய், தனது குருவாக ஈற்றுக்கொண்டுள்ளார் என்பது, இந்த சந்திப்பு குறித்து விஜய் அளித்த விளக்கத்தில் தெரிகிறது. அதாவது, மோடியை விஜய் 'குருஜி' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் விஜய் கூறியதாவது :

ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திரமோடி என்னை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்த போது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. மீண்டும் கொயம்புத்தூர் வருகை தரும் பொது என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள். எனவே கொயம்புத்தூரில் வைத்து நான் நரேந்திரமொடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வெண்டும் என கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்த பொது என்னிடம் அன்போடும் எளிமையாகவும் பேசினார். அவர் என்னிடம் என்னுடைய 21 வருட சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார்.

நாட்டின் முக்கிய தலைவர் என்னைப் பற்றி இந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை, அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை....

பாராளுமன்ற தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, வாக்கு சேகரிப்பதில் படு வேகம் காட்டுகிறார். இந்நிலையில், கடந்த 13-ந்தேதிதான் ரஜினியை சந்தித்தார். அதையடுத்து, இது அரசியல் சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று சொன்ன ரஜினி, மோடி ஒரு வலிமையான மனிதர். தகுதி வாய்ந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினர். இந்நிலையில், அடுத்த மூன்றே நாட்களில் கோவையில் விஜய்யை சந்தித்தார் மோடி. அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
 
இதையடுத்து மீடியாக்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டு, சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று துருவி துருவி கேட்டதற்கு விஜய் பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக அவர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, மோடியை சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ரஜினி பாணியிலேயே கூறியுள்ளார் விஜய். மோடி நாட்டின் மிகப்பெரிய தலைவர். கடந்தமுறை அவர் சென்னை வந்தபோது என்னை சந்திக்க விரும்பினார். ஆனால் நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் சந்திக்க முடியவில்லை. மீண்டும் அவர் கோவை வந்துள்ளார். அவரே என்னை சந்திக்க விரும்பியதால், உடனடியாக அவரை சென்று சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பல் அரசியல் இல்லை. அன்பு மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார்.
 
ஆக, ரஜினி- விஜய் இரண்டு பேருமே அரசியல் கட்சி தலைவர் மோடி சந்தித்தின் பின்னணியில் அரசியல் இல்லை என்று சொன்னாலும் அதை நம்புவதற்கு யாரும் இங்கே தயாராகவும் இல்லை என்று ஒருசாரர் பேசிக்கொள்கிறார்கள்..
 

Comments