Tamil Digital Film Association Membership Card Launch Stills!!! உருவானது புதிய தயாரிப்பாளர் சங்கம்!!!



 
 
   
 
 
 
9th of April 2014
சென்னை:: Tags : Tamil Digital Film Association Membership Card Release Gallery, Tamil Digital Film Association Membership Card Launch Event Photos, Tamil Digital Film Association Membership Card Launch Pictures, Celebrities at Tamil Digital Film Association Membership Card Launch images...

தமிழ் சினிமாவில் பெப்சியை தலைமையாக கொண்டு 23 தொழிற்சங்கங்கள் உள்ளது. இதுதவிர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவைகள் உள்ளது. இதுதவிர இப்போது புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது.
தமிழ் இலக்க(டிஜிட்டல்) குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நலச் சங்கம் என்பது அதன் பெயர். இதன் தலைவராக கலைபுலி ஜி.சேகரனும், செயலாளராக பூபதி ராஜாவும் உள்ளனர்.
 
இதன் துவக்க விழா சென்னையில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவில் சேம்பர் தலைவர் கல்யாண், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.

இது எந்த சங்கத்திற்கும் போட்டியானது அல்ல. திரைப்படம் தவிர குறும்படம், ஆவணப்படங்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவுமே இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது தனித்த அமைப்பாக செயல்படும், சினிமாவுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பில்லை" என்கிறார். சங்கத்தின் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன்...
 

Comments