29th of April 2014
சென்னை::Sunny Leone Hot Stills, பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த வாரம் ஏப்.18ம் தேதி, மும்பை- புனே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வைர வியாபாரியின் தனிப்பட்ட இல்லத்து நிகழ்ச்சியில்>>
பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த வாரம் ஏப்.18ம் தேதி, மும்பை- புனே
நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வைர வியாபாரியின் தனிப்பட்ட இல்லத்து
நிகழ்ச்சியில் இரவு அரை நிர்வாண நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடியதாக
சமூக வலைத்தளங்களில் செய்தி உலாவந்தது. ஒரு வாரமாக பலரும் இது குறித்து சில
புகைப்படங்களும் வெளியிட்டு செய்தியை பகிர்ந்து கொண்டனர். இந்த
நிகழ்ச்சிக்காக ரூ.40 லட்சம் அவர் பெற்றுக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில்
கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய சன்னி லியோன், தனது டிவிட்டர்
பக்கத்தில், அந்தப் படங்கள் அனைத்தும் போலியானவை என்றும், ஏப்.18ல்
படப்பிடிப்பில் இருந்ததாகவும், அந்த நாள் இரவில் நிகழ்ச்சியில்
இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்
தன்மையை அறிந்து வெளியிடவேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுக்
கொண்டுள்ளார்.
Comments
Post a Comment