தமிழ்புத்தாண்டில், சூர்யா - வெங்கட்பிரபு படம் துவக்கம்!!!Studio Green Prodcution No 11 Pooja Stills!!!

14th of April 2014
சென்னை::வெங்கட்பிரபு உடன் சூர்யா இணையும் புதிய படத்தின் பூஜை, தமிழ் புத்தாண்டில் சிறப்பாக நடந்தது. சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களுக்கு பிறகு வெங்கட்பிரபு, அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் ஆஸ்தான... 


வெங்கட்பிரபு உடன் சூர்யா இணையும் புதிய படத்தின் பூஜை, தமிழ் புத்தாண்டில் சிறப்பாக நடந்தது. சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களுக்கு பிறகு வெங்கட்பிரபு, அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். மதன் கார்கி பாடல் வரிகள் எழுதுகிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று(ஏப்ரல் 14ம் தேதி) தமிழ்புத்தாண்டு நன்நாளில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா, அவரது அப்பா சிவக்குமார், இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு, ஸ்டண்ட் இயக்குநர் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
தற்போது சூர்யா, 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதனை முடித்த பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.





























 






14th of April 2014
சென்னை::
Tags : Studio Green Prodcution No 11 Movie Pooja Photos, Studio Green in New Tamil Movie Launch images, Surya in Studio Green's Prodcution No 11 Film Poojai Event Stills, Studio Green Prodcution No 11 Movie Launch Function Gallery, Studio Green Prodcution No 11 Movie Shooting Start Pictures, Surya in Venkat Prabhu Film Pooja Stills...
.

Comments