Sonakshi Sinha Makes Her Debut With Rajinikanth!!! ரஜினி படத்தில் சோனாக்‌ஷி நடிப்பது உறுதி!!!

8th of April 2014
சென்னை::Sonakshi Sinha has confirmed  to make her debut with Rajinikanth and K.S.Ravikumar. The movie is expected to be shot in Mysore and it will be hitting the screens by the end of this year. The movie will be produced by Rockline Venkatesh and the rest of the cast details is expected to be announced soon. Stay tuned for more updates on this biggie!
 
ராணா’வில் கைவிட்டுப்போன வாய்ப்பு மீண்டும் கே.எஸ்.ரவிகுமாருக்கு கிட்டியுள்ளது என்றும் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது அவர்தான் என்றும் பல தகவல்கள் உலாவருகின்றன. ஆனால் ரஜினியோ, கே.எஸ்.ரவிகுமாரோ அது தொடர்பான உறுதியான அறிக்கைகள் எதுவும் இன்னும் வெளியிடவில்லை.
 
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதை தொடர்ந்து இந்தி இளம் முன்னணி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் சோனாக்‌ஷி சின்ஹா ரஜினியின் நீண்டகால நண்பரான நடிகர் சத்ருக்கன் சின்ஹாவின் மகள் என்பதால் ரஜினி தயங்கியதாகவும் சொல்லப்பட்ட்து.
இப்போது இந்த யூகங்களுக்கு வேறு ஒரு திசையில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இப்படி ஒரு படம் ஆரம்பிக்கப்படுவது உண்மைதான் என்பதையும் தனது சமூகவலைதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார் சோனாக்‌ஷி.
 
அதில் “முதல் முதலாக தமிழில் நடிக்க இருக்கிறேன். அதிலும் தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் என்பதில் கூடுதல் சந்தோஷம்” என குறிப்பிட்டும் உள்ளார். அனேகமாக வரும் ஜூலை மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது...
 

Comments