Snow World in Abirami Theater 2014 Photos!!! அபிராமி மெகா பணி உலகத்தில் 'ஐஸ் நடன மேடை!!!




 





14th of April 2014
சென்னை::
Tags : Snow World in Abirami Theater 2014 images, Snow World in Abirami Theater 2014 Gallery, Snow World in Abirami Theater 2014 Evet Pictures, Snow World in Abirami Theater 2014 images, Snow World in Abirami Theater 2014 Stills..

தமிழகத்திலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட அபிராமி மெகா பணி உலகத்தில், ஒவ்வொரு கோடைக்காலத்திலும் ஏதாவது ஒரு புதிய வசதியை ஏற்படுத்தி வருகிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கத்தை போக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அபிராமி மெகா பணி உலகத்தில் இந்த ஆண்டு கோடையை நடனம் ஆடி கொண்டாட, ஐஸ் நடன மேடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன் முறையாக பனிக்கட்டியாலேயே அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நடன மேடையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், நடனம் ஆட ஆர்வம் இருந்தும், தெரியாது என்ற காரணத்தால் ஆடாமல் இருப்பவர்களுக்கு இங்கு நடனமும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

ஹிப் ஹாப் டான்ஸ், பாங்ரா டான்ஸ், குத்து டான்ஸ், லுங்கி டான்ஸ் என்று விதவிதமான நடனம் ஆடி மக்கள் மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அபிராமி மெகா ஸ்நோ வோல்டின் ஐஸ் நடன மேடை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றாற்போது பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐஸ் பனி மேடை திறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, பின்னணி பாடகர் பாலா கானா ஆகியோர் கலந்துகொண்டு, பனி மேடையை வாடிக்கையாளர்களுக்கு திறந்து வைத்தனர்.

ஆர்க்டிங் மியூசிக் குழு அதாவது பெங்குவின்கள், போலார் கரடிகள், டால்பின்கள் இவைகளுடன் வண்ண வண்ண விளக்குகள், பல வகையான மியூசிக்கிற்கு ஏற்றாற்போல் பனியிலேயே நடனமாடலாம்.

அனல் பிழம்பாக 50 அடி பனிச்சறுக்கு, பனிச்சிற்பங்கள் என்று நிஜ பனி உலகத்தையே நம் கண் முன் நிறுத்தும், இந்த அபிராமி ஐஸ் உலகத்தில், உருவாக்கப்பட்டுள்ள பனிக்கட்டிகள் மிகச்சுத்தமானதும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் ஆனதுமாக உள்ளது. இங்கு எப்போதும் 50 டன்கள் எடையுள்ள பனி உறைந்த நிலையில் உள்ளது.

உள்ளே செல்பவர்களுக்கு குளிர் பாதுகாப்பிற்காக இதற்கே தயாரான பூட்ஸ், ஜெர்கின் கோட், கைகளுக்கான பனியுறை கொடுக்கப்படும். ஒவ்வொருவரும் உபயோகத்தபின் டெட்டால் சுத்தம் செய்யப்பட்டு அடுத்து வருபவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஒருமுறை உள்ளே அபிராமியின் மெகா பனி உலகத்திற்குள் சென்றால், 20 நிமிடம் வரை அதன் குளிச்சியை அனுபவிக்கலாம். அதேபோல இதன் உள்ளே உருவாக்கப்பட்டுள்ள குளுமை உடல் ஆரோக்கியத்துக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமியின் மெகா பனி உலகத்திற்குள் செல்வதற்கு முன்னாள் ஒரு திகில் நிறைந்த குகைப்பாதை உள்ளது. மேலும் நீங்களும் உங்கள் குடும்பமும் இணைந்து அபிராமியின் மெகா பனி உலகத்தின் பின்னணியில் இருக்கும்போது புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளலாம். இவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் டி ஷர்டிலோ, கீசெயினிலோ பிரிண்ட் செய்து கொள்ளலாம். இவற்றை செய்து கொடுப்பதற்காகவே, பிரத்யேகமாக புகைப்பட கலைஞர்கள் மற்றும் டிசைனர்கள் அங்கேயே இருப்பது இதன் மற்றொரு தனிச்சிறப்பு.

அமர்நாத் ஐஸ் லிங்கம், பனிக்குகையில் இருக்கும்போது எஸ்கிமோக்களீன் வீடான இக்ளுவிற்குள் நுழைந்து பார்க்கலாம். ஐஸில் சறுக்கி விளையாடலாம், பனி மனிதன் செய்யலாம், ஒருவர் மேல் ஒருவர் பனியை பந்தாக எறிந்து கொள்ளலாம், பனி மழை பொழிவது என்று அபிராமி மெகா பனி உலகத்தில் பல தனி சிறப்பு வாய்ந்த அம்சங்கள் உள்ளன.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள், மாணவர்களுக்கான பேக்கேஜ், மொத்த புக்கிங்கள் போன்ற சிறப்பு சலுகைகளூம் இங்கு வழங்கப்படுகிறது.

அபிராமை மெகா பனி உலகம், வருடத்தின் 365 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்குகிறது.

Comments