கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம் : கேக் ஊட்டிய விஜய்; வெட்கப்பட்ட சமந்தா!!! Samantha Birthday Celebration!
29th of April 2014
சென்னை::தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் தான் கடந்த சில வருடங்களாக பிஸியாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவருக்கு அதனாலேயோ என்னவோ கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக எந்த தமிழ்ப்பட வாய்ப்பும்.
தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் தான் கடந்த சில வருடங்களாக பிஸியாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவருக்கு அதனாலேயோ என்னவோ கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக எந்த தமிழ்ப்பட வாய்ப்பும் அமையவில்லை.
இருந்தாலும் தற்போது ‘கத்தி’யில் விஜய்யுடன், ‘அஞ்சானி’ல் சூர்யாவுடன் என இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். கடந்த கால கட்டங்களில் அவரை கை விட்டுப் போன படங்கள் எல்லாமே இப்போது பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க தோதுவாக அமைந்துள்ளன.
இதனால் உற்சாகத்துடன் காணப்படும் சமந்தா இந்த வருடம் தனது 27-வது வயது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் ஹீரோ விஜய், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பட யூனிட்டினருடன் சேர்ந்து கொண்டாடினார்.
அவருக்காக படப்பிடிப்பு தளத்துக்கே பெரிய சைஸ் சாக்லேட் கேக் வரவழைத்திருந்தார் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ். கேக்கின் நான்கு மூலைகளிலும் சிறிய சைஸ் மெழுகுவர்த்தி வைக்கப்பட்டு, சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற வாசகத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த கேக்கை மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து கேக்கை வெட்டினார் சமந்தா. கேக் வெட்டிய சமந்தாவுக்கு, அதில் ஒரு துண்டை ஊட்டி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் நடிகர் விஜய். கூடவே டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ், மற்றும் தயாரிப்பாளர் ஐயங்கரன் கருணா உள்ளிட்ட படக்குழுவினரும் சமந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்குப் பிறகு தமிழில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரே ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் சமந்தா. அதன்பிறகு வேறு எந்தப்படமும் தமிழில் ரிலீசாகவில்லை. ஆனால் இப்போது விஜய், சூர்யா என இரண்டு ஹீரோக்களின் படங்கள் அவர் கைவசம் இருப்பதால் மிகுந்த உற்சாகத்தோடு தமிழில் அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகி வருகிறார்.
Comments
Post a Comment