Romeo Juliet Movie Stills!!!!ரோமியோ ஜூலியட் தலைப்பை எப்படி விட்டு வைத்தார்கள்! ஆச்சர்யத்தில் இயக்குனர்!!!




 

 




13th of April 2014
சென்னை::Tags : Romeo Juliet New Movie Photos, Romeo Juliet Latest Movie Gallery, Romeo Juliet Unseen Movie Pictures, Romeo Juliet Film Latest images, Romeo Juliet Movie Hot Stills, Romeo Juliet Movie New Pics.
ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே இருவரும் இணைந்து எங்கேயும் காதல் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது பூலோகம் மற்றும் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படம் என பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா நடிக்கும் இப்படத்திற்கு “ரோமியோ ஜூலியட்” என தலைப்பு வைத்திருககிறார்கள்.

படத்திற்கான கதையை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயகியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். மச்சக்காரன், நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குனர் லஷ்மன்….
பேண்டஸியான காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது திரைக்கதை.

இந்த 2014 – ல் 1947 களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவும், இதே 2014 – ல் 2025 – ல் தான் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதே இந்தப்படம்.

ஒரு வருடத்திற்கு 300 ல் இருந்து 200 படங்களாவது காதலை மையப்படுத்தியதாக இருக்கிறது. இந்த ரோமியோ ஜூலியட் என்ற தலைப்பை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஒருவேளை இந்த தலைப்பு இந்த படத்திற்காகவே காத்திருந்ததோ என்கின்றனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

Comments