Rajini in Lingaa Movie First Look Poster!!! ரஜினி, கே எஸ் ரவிக்குமார், ரஹ்மான், சோனாக்ஷி கூட்டணியில் லிங்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
30th of April 2014
சென்னை::Tags : Lingaa Movie New Posters, Lingaa Film Banner images, Lingaa Latest Poster, Lingaa Movie Wallpaper Pictures, Lingaa New Movie Stills, Lingaa Movie Gallery.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டது.
ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு லிங்கா என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக ஒன்இந்தியா நேற்றே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இன்று அந்த செய்தி ரஜினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் லிங்கா என தலைப்பிடப்பட்டுள்ளது. கே எஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் டிசைன் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆங்கிலத்தில் சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட ஒரு படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, ரஹ்மான் படங்கள் இடம் பெற்றுள்ளன.
Comments
Post a Comment