Naan Sigappu Manithan Movie Press Meet Photos::லட்சுமி மேனனின் உதட்டு சாயம் தான் 'நான் சிகப்பு: விஷால்!!!
5th of April 2014
சென்னை::Naan Sigappu Manithan Media Meet Stills, Naan Sigappu Manithan Press Meet Gallery Pics, Naan Sigappu Manithan Press Meet images, Naan Sigappu Manithan Movie Team Meet Media Peoples Pictures, Naan Sigappu Manithan Press Meet Event Photos.
இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கும் 'நான் சிகப்பு மனிதன்'
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், லட்சுமி மேனன், இயக்குநர்
திரு, தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில்
பேசிய விஷால், 'நார்கோலப்ஸி' எனும் தூக்க வியாதியில் தவிக்கும் எனக்கு,
இப்படத்தில் லட்சுமி மேனனுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி இருப்பதால்
இப்படத்திற்கு இங்குள்ள சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டனர்.
யு
சர்ட்பிகேட் வேண்டி ரிவைசிங் கமிட்டி செல்கிறோம். அவர்கள் நாங்கள் கேட்கும்
சான்றிதழை தந்தாலும், தராவிட்டாலும் அந்த லிப்லாக் கிஸ்ஸிங் சீனை படத்தில்
இருந்து நீக்கும் எண்ணமில்லை. அதேசான்றிதழுடன் படத்தை ரிலீஸ்
செய்யவுள்ளோம். காரணம், நான் சிகப்பு மனிதன் படத்தின் கதைக்கு அந்த
முத்தக்காட்சி அவ்வளவு அத்தியாவசியம் என்றார். அதைத்தொடர்ந்து விஷாலை
நோக்கி மீடியாக்களின் கேள்விகள் நீண்டன! அதில் நமது நிருபர் கேட்ட
சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு விஷாலின் சுவையான சூடான பதில்களும் இங்கு
உங்களுக்காக...
நமது நிருபர் : பழைய 'நான்
சிகப்பு மனிதன்' படத்தில் ரஜினிகாந்த், இரவில் சமூக விரோதிகளை கொன்று
குவிப்பார். அதனால் அவருக்கு நான் சிகப்பு மனிதன் என பெயர். இதில் நாயகி,
லட்சுமி மேனனின் உதட்டு சாயம் உங்கள் உடல் முழுக்க பூசப்படுவதால் தான்
நீங்கள் நான் சிகப்பு மனிதன் ஆகிறீர்களா.?
விஷால் : (ஒட்டு
மொத்த மீடியாவின் சிரிப்பினூடே 'நான் சிகப்பு மனிதன்' குழுவினருடன்
விஷாலும் சிரித்தபடி...) படத்தில் மொத்தம் இரண்டு லிப்லாக் சீன் இருக்கு.
ஒன்று அந்த அண்டர் வாட்டரில், மற்றொன்று தரையில், இரண்டுமே படத்திற்கும்,
இப்படகதைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வைக்கப்பட்டிருக்கிறது.
மற்றபடி என் மீது லட்சுமியின் உதட்டு சாயம் தான் சிகப்பு மனிதனாக
காட்டுகிறது என்பதெல்லாம் ரொம்ப ஓவர். (தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எப்படி
எல்லாம் யோசிக்கிறீங்க.?!)
நமது நிருபர் :
படம் முழுக்க தூக்க வியாதியால் நின்று கொண்டே, நடந்து கொண்டே தூங்கும்
நீங்கள் லட்சுமி மேனனுடனான முத்தக்காட்சியில் தூங்க மறந்தது எப்படி? (சபையே
சிரிக்கிறது)
விஷால் : நல்ல கேள்வி
(மீண்டும் சிரிப்பு...) நீங்கள் ரொம்ப யோசிக்கிறீங்க... படம் பார்க்கும்
போது நாங்க ஏன் அப்படி யோசிக்கலை, முத்தக்காட்சியில் ஏன் தூங்கலைன்னு
புரியும்.
நமது நிருபர் : படம் முழுக்க உங்களுக்கு தூங்குற வியாதி, லட்சுமி மேனன் ஏன் அந்த ஒரு பாடல் காட்சியில் தூங்கியபடியே இருக்கிறார்.?!
விஷால் : ஒருவேளை
என்கிட்டேயிருந்து அந்த வியாதி அவருக்கும் ஒட்டியிருக்கலாமுன்னு
நினைச்சுடாதீங்க. அது ஒரு கனவு பாடல். உல்டாவா எனக்கு கனவு வருதுன்னு
வச்சுக்குங்க. இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும். இன்னும் சொன்னா
படம் பார்க்கும்போது சற்பென்ஸ் போயிடும்!
நமது நிருபர் : விஷால்,
எத்தனையோ நாயகிகளுடன் நடித்திருக்கிறீர்கள், சொந்தப்படத்தில் லட்சுமி
மேனனை கதாநாயகி ஆக்க காரணம் நீங்கள் தான் சிபாரித்தாக இயக்குநர் திரு வேறு
கூறிவிட்டார்?
விஷால் : சொல்லிவிட்டாரா?
'பாண்டியநாடு' நடித்தபோது என் உயரத்திற்கும், இந்த கதைக்கும் லட்சுமி
பொருத்தமாக தெரிந்தார் என்பது தான் காரணம் என்றபடி அத்தனை பெரிய
கூட்டத்திலும் நம்மை(தினமலர் நிருபரை) பார்த்து பெரும் கும்பிடு போட்டார்
விஷால்!....
Comments
Post a Comment