Mundasupatti Pressmeet Stills!!! நடிகர் விஷால், லட்சுமிமேனன் விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: நந்திதா கோரிக்கை!!!
சென்னை::நடிகர் விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் காதல் என்று
செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு நான்
சிவப்பு மனிதன் பட விழாவில் நடிகர் விஷ்ணு அவர்கள்>>
நடிகர் விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் காதல் என்று செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு நான் சிவப்பு மனிதன் பட விழாவில் நடிகர் விஷ்ணு அவர்கள் காதல் விவகாரத்தை ஜாடையாக பேசினார். அந்த மேடையிலேயே விஷால் அதை மறுத்தாலும். காதல் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) விஷ்ணு நடித்துள்ள முண்டாசுபட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணு பேசும்போது "விஷாலுக்கும், லட்சுமிமேனனுக்கு நெருங்கிய நண்பர் நந்திதா. நான் லட்சுமிமேனனுடன் போனில் பேசுவதற்கு நந்திதாதான் உதவினார். நந்திதா விஷாலுடன் பேச ஆரம்பித்த பிறகு என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். ஆனால் அவர்களுக்குள் எந்த மாதிரியா நட்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது" என்றார்.
இதைத் தொடர்ந்து மைக் பிடித்த நந்திதா, "லட்சுமி மேனன், விஷால் விவாகரத்தில் நான் ஏன்? என்னை ஏன் அதில் இழுத்துவிடுறீங்க" என்று அப்பாவியாக கேட்டார்.
விழா முடிந்ததும் நந்திதாவிடம் என்னதான் நடக்குது? என்று கேட்டால்... "மேடையில பேசினதெல்லாம் -சும்மா விளையாட்டுக்குத்தான். லட்சுமி மேனன் என்னோட பெஸ்ட் பிரண்ட். விஷால் அடிக்கடி போன் பண்ணி பேசுவார். மற்றபடி வேறெதுவும் இல்லை. இப்பதான் வளர்ந்து வந்துகிட்டிருக்கேன். அதுக்குள்ள ஏதாவது வில்லங்கத்துல இழுத்து விட்டுடாதீங்க ப்ளீஸ்." என்றார்..
Comments
Post a Comment