Mundasupatti Movie Stills!!! இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன்: நந்திதா!!!

30th of April 2014
சென்னை::புதுமுக இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை நந்திதா, இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்>>

 

 
 

 
 
 
 
Tags : Mundasupatti New Movie Photos, Mundasupatti Latest Movie Gallery, Mundasupatti Unseen Movie Pictures, Mundasupatti Film Latest images, Mundasupatti Movie Hot Stills, Mundasupatti Movie New Pics

புதுமுக இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை நந்திதா,
இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து 'எதிர்நீச்சல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றார். இதுதவிர 'நளனும் நந்தினியும்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதுதவிர மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே புதுமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் தான்.

தொடர்ந்து புதுமுகங்களின் படங்களில் நடிப்பது பற்றி நடிகை நந்திதாவிடம் கேட்டபோது, இப்போது வரும் புதுமுக இயக்குநர்கள் எல்லாம் நிறைய திறமையோடு, நல்ல கதையம்சத்துடனும் படம் எடுக்கிறார்கள். சமீபகாலமாக வித்தியாசமான படங்கள் தான் மக்களிடமும் வெற்றி பெறுகிறது. மேலும் இதுபோன்ற படங்கள் எனக்கும் ஏற்றமாதிரி இருப்பதால் நானும் புதுமுக இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமையும் என்றால், இனி நானும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பேன் என்கிறார்.

Comments