கேரவன் வேண்டாம்..! குடைபிடிக்க ஆளும் வேண்டாம்!!! kaththi Shooting Spot Stills!!!!!!!


2nd of April 2014
சென்னை::மேலே சொன்ன வாசகங்களுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல.. விஜய்யே தான்.. அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லப்படுகிற அவருடன் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரிடமும் பேசும்போது விஜய்யைப்பற்றி அவர்கள் தவறாமல் சொல்வது அவரது எளிமையைத்தான்.

துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால், “விஜய் இவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார்.. ஆனால் சாதாரணமாக ஒரு மேஜைமீது படுத்து தூங்குகிறார்” என ஆச்சர்யப்பட்டு கூறியிருந்தார்.
இப்போது ஆச்சர்யப்படுவது சமந்தாவின் முறை. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் சமந்தா எப்போதுமே தன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடுவார். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் கேரவன் எதுவும் கேட்காமல் ஒரு பிளாஸ்டிக நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு யாருக்கும் தொந்தரவில்லாமல் விஜய் அமர்ந்திருந்ததை பார்த்து சமந்தா ஆச்சர்யப்பட்டு போனாராம்.
மேலும் வெயிலுக்கு குடைபிடிக்க என்று ஒரு ஆள் கூட வைத்துக்கொள்ளாத விஜய்யின் எளிமை அவரை கவர்ந்துவிட தனது ட்விட்டரில் அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார் சமந்தா. மேலே உள்ள படத்தை பார்த்தாலே அது உண்மை என்று உங்களுக்கு புரியும்.kaththi Shooting Spot Stills images!

Comments