Jilla 100 Days Celebration Photos!!! வெறிப்பிடித்த ரசிகர்கள் எங்கூட இருக்கும் வரை…? : ‘ஜில்லா’ விழாவில் தில்லாகப் பேசிய விஜய்!!!

20th of April 2014
சென்னை::விஜய் எப்போதுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் ’தலைவா’ பட ரிலீசின் போது ஆளும்கட்சியினர் அவரை பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டதாலோ என்னவோ இப்போது ரொம்பத் தெளிவாகவும், தைரியமாகவும்>>>





















Tags : Jilla 100 Days Celebration Stills, Jilla 100 Days Celebration Gallery, Jilla 100 Days Celebration Pictures, Jilla 100 Days Celebration Event images, Jilla 100 Days Celebration Function Photos,

விஜய் எப்போதுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் ’தலைவா’ பட ரிலீசின் போது ஆளும்கட்சியினர் அவரை பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டதாலோ என்னவோ இப்போது ரொம்பத் தெளிவாகவும், தைரியமாகவும் பேசுகிறார்.
‘ஜில்லா’ 100-வது நாள் விழாவில் விஜய்யின் பேச்சில் அந்த தைரியத்தைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக ”என்னைச்சுத்தி வெறிப்பிடிச்ச ரசிகர்கள் இருக்கும் வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார் விஜய்.
விழாவில் அவர் பேசியதாவது :
கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாரும் ஜெயிக்கலாம். அப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க எல்லாரும் ஜெயிக்கிறாங்களான்னு நீங்க கேட்கலாம். ஆனா ஜெயிச்சவங்க எல்லாருமே கஷ்டப்பட்டு உழைச்சவங்க தான்.

அப்படிப்பட்ட ஒரு உழைப்புல கெடைச்சது தான் இந்த ‘ஜில்லா’வோட வெற்றி. இந்த ‘ஜில்லா’ படம் ரிலீசுக்கு முன்னாடி ஒரு படம் ( தலைவா ) ரிலீஸ் ஆச்சு. அந்தப்படம் ரிலீஸ் டைம்ல சில பிரச்சனைகளை நாம எதிர் கொண்டோம். உங்க எல்லாருக்குமே அது தெரியும். அதுக்கப்புறம் கூட எம்மேல முழு நம்பிக்கை வெச்சு இந்தப் படத்தை வாங்கி, ரிலீஸ் பண்ணி நல்ல பப்ளிசிட்டி பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்த ஒவ்வொரு வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டரி உரிமையாளர்களுக்கும் இந்த நேரத்துல மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன்.

பலத்த போட்டிகளுக்கு நடுவுல 100-வது நாள் விழாங்கிறது சாதாரணம் விஷயம் இல்ல. அதுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு காரணமானவங்க ரசிகர்கள் தான். டிவி, இன்டர்நெட், திருட்டு வி.சி.டி இதையெல்லாம் தாண்டி தியேட்டருக்கு வந்து படம் பார்த்தவங்க என்னோட ரசிகர்கள். சினிமாங்கிறது ஒரு கனவுத் தொழிற்சாலை. அந்த கனவுத் தொழிற்சாலையோட கண்கள் ரசிகர்கள். அவங்களோட கண்ணால படங்களை பார்க்கலேன்னே இந்த தொழிற்சாலையே இயங்காது.

எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர்களுக்கே சம்பளம் கொடுக்குற கண்ணுக்குத் தெரியாத முதலாளி ரசிகன் தான். காசு கொடுத்து படம் பார்க்கிறாங்க, காசே வாங்காம பப்ளிசிட்டி பண்றாங்க. சினிமா எத்தனையோ குடும்பங்களை வாழ வெச்சுக்கிட்டிருக்கு. ஆனா அந்த சினிமாவையே வாழ வெச்சுக்கிட்டிருக்கிறது ரசிகன் தான்.

கிரிக்கெட் விளையாட்டுல அந்த கடைசி பாலை அடிக்கும் போது ப்ளேயருக்கு கண்டிப்பா ஒரு டென்ஷன் இருக்கும். ஆனா அதை விட அந்த ஆடியன்ஸ் தான் ரொம்ப ரொம்ப ஆவலா இருப்பாங்க. அது மாதிரி என்னோட ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் இது நல்லா ஓடணும்கிறதுல என்னை விட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்காங்க. அப்படிப்பட்ட ரசிகர்கள் என் கூட இருக்கிற வரைக்கும்….? சரி விடுங்க… ( என்னை ஒன்னும் செய்ய முடியாது என்பதைத்தான் விஜய் அப்படிச் சொன்னார். ) இந்த சந்தோஷமாக நேரத்துல எனக்கு ஒரு சின்ன ஆசை. அதுவும் இப்போ இருக்கிற புது இயக்குனர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ஜில்லா டைரக்டர் நேசன் படம்  முதற்கொண்டு புது டைரக்டர்களோட எல்லாப் படங்களையும் நான் பார்க்கிறேன். புதுப்புது ஐடியாக்களோட நல்ல நல்ல படங்கள் பண்றாங்க.

ஆனா என்ன ஒரு வேண்டுகோள்னா ரெண்டரை மணி நேரத்துக்குள்ள உங்க கதையை சொல்லி முடிச்சிடுங்க. அதுக்கு மேல போச்சுன்னா., படம் நல்லாவே இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தை பார்க்கிறதுக்கு பதிலா அவங்களோட வாட்ச்சைப் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. பொழுதுபோக்குங்கிற விஷயத்தை மறந்துட்டு அய்யய்யோ டைம் ஆயிட்டிருக்கேங்கிற அந்த ஒரு ஃபீலிங்க்ஸ் வந்துரும். ரொம்ப நேரம் படம் எடுத்தா பாம்பு கூட கீரிப்புள்ளகிட்ட தோத்துப் போயிடும். அதனால அதை மனசுல வெச்சுக்கிட்டு படம் எடுங்க.
இந்தப்படத்தோட டைரக்டர் நேசன் எனக்கு ரொம்ப பிடிச்ச டெக்னீஷியன். இந்தப்படம் ஷூட்டிங் நடக்கும் போது முந்தின ( தலைவா ) படத்தோட டென்ஷன் நெறைய எனக்குள்ள இருந்துச்சு. அதோட உச்சக்கட்ட டென்ஷன்ல தான் நாங்க ஷூட்டிங் பண்ணிக்கிட்டிருந்தோம்.

அந்த டைம்ல நீங்க எதையுமே உங்க மனசுல எடுத்துக்காதீங்க. உங்க வேலையை மட்டும் கரெக்ட்டா பாருங்கன்னு சொல்லுவேன். அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஜில்லா படத்தை அழகா பண்ணிக்கொடுத்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனி எனக்கு ஒரு ராசியான கம்பெனி. செளத்ரி சாரோட தொடர்ந்து எல்லாப் படங்களும் வெற்றிப்படங்களா அமைஞ்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். அடுத்து உங்களை நான் கத்தியில மீட் பண்றேன் இவ்வாறு விஜய் பேசினார்...

Comments