happy birthday siddharth: ஹேப்பி பர்த்டே சித்தார்த்!!!

17th of April 2014
சென்னை::சாக்லேட் பாய்ன்னு பொண்ணுங்க எல்லாமே சொல்லுவாங்களே, அதுக்கு அர்த்தம் என்னான்னு டிக்ஷனரியை புரட்டி பார்த்தா சித்தார்த்ன்னு அர்த்தம் போட்டிருக்கும். அந்த அளவுக்கு இளம் ரசிகைகளின் கனவுக்கண்ணன். இவர் குட்டுப்பட்டது ஷங்கரின் மோதிரக்கையில் தான் என்றாலும் இவரை வாரி அரவணைத்தது தெலுங்கு திரையுலகம் தான்.
 
ஆனால் ஒரு தமிழனான தனக்கு தெலுங்கில் நல்ல இடம் கிடைத்தாலும் தமிழிழும் தனக்கான இடத்தை பிடித்தே தீருவேன் என்று இப்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் தீயாக வேலை செய்துவருகிறார் இந்த குமார்.
 
அடுத்ததாக காவியத்தலைவன், ஜிகர்தண்டா என இன்னும் நடிப்பில் பன்முகம் காட்ட தயாராக களத்தில் இறங்கி இருக்கிறார் சித்தார்த்.
 
இன்று பிறந்தநாள் காணும் சித்தார்த்திற்கு நமது poonththalir-kollywood இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..
 

Comments