En Vazhi Thani Vazhi Movie Stills!!! ஆர்.கே, பூனம் கவுர் நடிக்கும் என்வழி தனிவழி ஜோர்டானில் படப்பிடிப்பு!!!

21st of April 2014
சென்னை::ஆர்.கே, பூனம் கவுர் நடிக்கும் என்வழி தனிவழி படத்தை மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படத்தின் ஒரு பாடல் காட்சியை ஜோர்டான்>>>

Tags : En Vazhi Thani Vazhi New Movie Photos, En Vazhi Thani Vazhi Latest Movie Gallery, En Vazhi Thani Vazhi Unseen Movie Pictures, En Vazhi Thani Vazhi Film Latest images, En Vazhi Thani Vazhi Movie Hot Stills, En Vazhi Thani Vazhi Movie New Pics.
 
ஆர்.கே, பூனம் கவுர் நடிக்கும் என்வழி தனிவழி படத்தை மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படத்தின் ஒரு பாடல் காட்சியை ஜோர்டான் நாட்டில் படமாக்கி திரும்பி உள்ளனர். மம்மி, மிஷன் இம்பாசிபிள் போன்ற ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

பத்ராவில் உள்ள தங்க நிற மலைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்தது. ஆர்கேவும், பூனம் கவுரம் ஓடிப்பிடித்து விளையாடி அதனை படமெடுத்திருக்கிறார்கள். ஹீரோ ஆர்கே, ஹீரோயின் பூனம் கவுர், இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடன இயக்குனர் பிருந்தா, கேமராமேன் ராஜரத்தினம், ஸ்பாட் எடிட்டர் சமஜித் முகமது, ஹெலிகேம் ஆபரேட்டர் ஹர்சவர்த்தன், எழுத்தாளர் வி.பிரபாகர் ஆகியோர் ஜோர்டான் சென்ற குழுவினர்.

ஜோர்டான் பயணம் பற்றி ஆர்கே கூறியதாவது: பொதுவாக ஜோர்டான் லொக்கேஷனை யாரும் தேர்வு செய்யமாட்டார்கள். காரணம் அங்கு கட்டுப்பாடுகள் அதிகம். அதோடு செலவும் அதிகம் ஒரு தினார் நம்ம ஊர் பணம் 90 ரூபாய்க்கு சமம். ஒரு தண்ணீர் பாட்டில் மூன்று திணார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் ஹாலிவுட் படங்கள்தான் அங்கு எடுப்பார்கள். செலவு அதிகம் என்றாலும் ஜோர்டான் உலகின் அழகான இடம். தங்க நிறத்தில் மின்னும் மலைகள், அதில் உள்ள குகைகள், பெரிய வரலாற்று பின்னணி ஆகியவற்றுக்காகவே ஜோர்டான் உலக மக்களால் விரும்பப்படுகிறது. அதனை தமிழ் படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பாடல் காட்சியின் வழியா ஜோர்டானின் அழகை காட்டப்போகிறோம். என்கிறார் ஆர்கே.
 

Comments