28th of April 2014
சென்னை::நடிப்பில், அதிக கவனம்!
சென்னை::நடிப்பில், அதிக கவனம்!
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, இசைப்பணியை கொஞ்சம் குறைத்துக்கொண்டு
நடிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். வீட்டிலேயே
::நடிப்பில், அதிக கவனம்!
::நடிப்பில், அதிக கவனம்!
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, இசைப்பணியை கொஞ்சம் குறைத்துக்கொண்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். வீட்டிலேயே நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
அவருடைய நடிப்பில் ‘சலீம்,’ ‘இந்தியா–பாகிஸ்தான்’ என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன!
5 மொழி படங்களில், சத்யராஜ்!
இன்றைய இளம் கதாநாயகர்களை விட, சத்யராஜ் கைவசம் அதிக படங்கள் வைத்து இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழி படங்களிலும் அவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருப்போர் பட்டியல் அதிகம்.
காலம்–நேரம் ஆகியவற்றில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ...காலம்–நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்!
விஜயலட்சுமி என்ன ஆனார்?
ப்ரண்ட்ஸ்’ படத்தில் நடித்த விஜயலட்சுமி என்ன ஆனார்? என்று பெரிய திரை–சின்னத்திரை பட அதிபர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக அவரை காணவில்லை. அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது.
அவராக எங்கிருக்கிறார்? என்று அறிவித்தால்தான் உண்டு!
அப்பா டைரக்ஷனில், மகள்!
அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கும் ஒரு படத்தை அடுத்து டைரக்டு செய்ய இருக்கிறார்.
படத்தில், ஒரு இளம் கதாநாயகனும் இருக்கிறார்.
அர்ஜுன் நடித்து வந்த ‘ஜெய்ஹிந்த் பாகம்–2’ படம் முடிவடைந்து விட்டது. அந்த படம் திரைக்கு வந்ததும், மகளை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கிறார்!
புத்திசாலி வாரிசு!
நளினியின் வீட்டுக்கு போகிறவர்கள் அங்கிருக்கும் பெயர் பலகையைப் பார்த்து மிரண்டு போகிறார்கள். ராமராஜன்–நளினி தம்பதிகளின் மகன் அருணின் பெயர் பலகைதான் அது. அவர் படித்த படிப்பை பெயருக்கு பின்னால் எழுதி வைத்து இருக்கிறார்.
அவருடைய பெயரை விட, நான்கு மடங்கு நீளமாக இருக்கிறது, படித்த படிப்பு! அப்பாவை, ‘டவுசர்’ என்று கிண்டல் செய்தவர்கள், மகனின் படிப்பை பார்த்து வாயடைத்துப் போகிறார்கள். புத்திசாலி வாரிசு!
நல்ல கதாபாத்திரம் கிடைத்தால்..!
சர்ச்சை புகழ் ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதாவுக்கு மீண்டும் ‘மேக்கப்’ போட வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறாராம்.
மறுபடியும் சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி!
3 மகள்களுக்கு அப்பாவாக கருணாஸ்!
பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு ஒரு நம்பிக்கையை கொண்டு வருகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படம் தயாராகி வருகிறது. ‘கல்லூரி’ அகில் கதாநாயகனாக நடிக்கிறார். கருணாஸ், 3 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக, மிக வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.
புதிய கோணத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சார்லஸ் டைரக்டு செய்கிறார். ‘நீயா, நானா?’ அந்தோணி தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் சார்லஸ் சொல்லும்போது, ‘‘அஞ்சலி, பூவே பூச்சூடவா பாணி கதை இது. குழந்தையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது’’ என்றார்!
ஒரு ‘பைலட்,’ டைரக்டர் ஆனார்!
டாக்டர்கள், என்ஜினீயர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த வரிசையில், இரண்டு ‘பைலட்’டுகள் புதிதாக திரையுலகுக்கு வந்து இருக்கிறார்கள். அதில் ஒருவரின் பெயர், அஷ்ரப். இன்னொருவர், பிரபு யுவராஜ். இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கு, ‘ர’ என்று ஒரே ஒரு எழுத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது, சஸ்பென்ஸ்–திகில் படம்.
‘ர’ படத்தில் அஷ்ரப் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபு யுவராஜ் டைரக்டு செய்கிறார். சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்தி, 27 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறார்கள்!
ஆக்ரோஷமான படம்!
கமல்ஹாசன், ஆர்.கே.செல்வமணி, சிம்பு ஆகியோரிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜெய்கிருஷ்ணா, ‘வன்மம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இது, உணர்ச்சிகளின் மோதல்கள் நிறைந்த ஆக்ரோஷமான படம். ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி, ‘கழுகு’ கிருஷ்ணா இருவரும் கதாநாயகர்கள். கிருஷ்ணாவுக்கு ஜோடி, சுனைனா. விஜய் சேதுபதிக்கு ஜோடி இருக்கிறதா, இல்லையா? என்பது படம் பார்க்கும்போது தெரியும் என்கிறார், டைரக்டர் ஜெய்கிருஷ்ணா!
இன்னொரு நிழல் உலகம்!
கடத்தல் தொழிலில் உள்ள இன்னொரு நிழல் உலகத்தையும், அதன் சர்வதேச தொடர்புகளையும் சித்தரிக்கும் வகையில், ‘களவு தொழிற்சாலை’ படம் உருவாகி வருவதாக கூறுகிறார், அதன் டைரக்டர் எஸ்.ரவிசங்கர். படத்தை பற்றி அவர் மேலும் சொல்கிறார்:–
‘‘கதாநாயகன் கதிர் தனது பெயரை ஜெய்ருத்ரா என்று மாற்றிக்கொண்டு இந்த படத்தின் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு நாயகன், வம்சி கிருஷ்ணா. மும்பை அழகி குஷி, கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். டைரக்டர் மு.களஞ்சியம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடிக்கிறார்.
இந்த படம், ஒரு நிறைவான காதலை நிச்சயம் நினைவுபடுத்தும்!’’
Comments
Post a Comment