11th of April 2014
சென்னை::அஜித்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை
தயாரித்தவர் 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. ஒருகாலத்தில் அஜித்தின் நிழல்போல்
இருந்த இவருக்கும், அஜித்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரவரும்
பிரிந்தனர். அதன் பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்த இவர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து 'வாலு' என்ற படத்தை
தயாரிக்க தொடங்கினார்.
விஜய் சந்தர் என்ற புது
இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிம்புவுக்கும்
வாலு படத்தின் கதாநாயகி ஹன்சிகாவுக்கும் காதல் ஏற்பட்டது.
படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கிப் பழகி காதல் வளர்த்தார்கள்.அதன்
காரணமாக, படப்பிடிப்பு நடக்கும்போது கேரவானுக்குள்ளேயே குடும்பம்
நடத்துகிறார்கள் என்றெல்லாம் அப்போது கிசுகிசுக்கள் வந்தன. வாலு படத்தின்
காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு, நான்கு பாடல் காட்சிகள்
மட்டும் பாக்கி இருந்தநிலையில், சமீபத்தில் சிம்பு - ஹன்சிகாவின் காதல்
முடிவுக்கு வந்தது. லவ் பிரேக்கப் ஆனதை அறிவித்தார் சிம்பு.
இருவரும்
பிரிந்த பிறகு 'வாலு' படம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டது. சிம்புவை
ஹன்சிகாவும், ஹன்சிகாவை சிம்புவும் நேரடியாக சந்திப்பதை தவிர்க்க
நினைத்தனர். அதனால் இருவருமே வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல்
இழுத்தடித்தனர். இயக்குநர் விஜய் சந்தரின் நீண்ட முயற்சியில், பிறகு ஒரு
வழியாக சிம்பு கால்ஷீட் தர ஒப்புக் கொண்டார். ஹன்சிகாவோ கால்ஷீட் தராமல்
தொடர்ந்து சாக்குபோக்குகள் சொல்லி இழுத்தடித்து வந்தார்.
இந்த
நிலையில்தான், 'வாலு' படத்தைத் தயாரித்து வரும் 'நிக் ஆர்ட்ஸ்'
சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்
புகார் செய்து இருக்கிறார். ''வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு 70 லட்சம்
சம்பளம் பேசப்பட்டு, அதில் 55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை
படமாக்கி முடித்ததும் மீதி 15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன்.
அப்படியும் ஹன்சிகா, 'வாலு' படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து
வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று
கூறுகிறார். அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி
கேட்டுக்கொள்கிறேன்.'' என்று அந்த புகாரில் 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி
தெரிவித்திருக்கிறார்.
'நிக் ஆர்ட்ஸ்'
சக்ரவர்த்தியின் புகாரை ஹன்சிகாவின் அம்மாவிடம் தெரிவித்த தயாரிப்பாளர்
சங்கம் ஹன்சிகாவை பஞ்சாயத்துக்கு அழைத்திருக்கிறது...

Comments
Post a Comment