உலக சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!


7th of April 2014
சென்னை::அறுபது வயதை தாண்டி 61ல் அடியெடுத்து வைக்கிறார் நம் உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான். ஆனால் படத்தை பாருங்கள் அப்படியா தெரிகிறது? உலகிலேயே பல நாடுகளிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பிஞ்சு குழந்தை முதல் பழுத்த பழம் வரை ரசிகர்கள் இருப்பது இவர் ஒருத்தருக்கு மட்டும்தான்..

இன்றும் இளைஞர்களுக்கு சவால் விடும் இவரது ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மாற்றாக இன்னொருத்தர் வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தனது காமெடி கலந்த சண்டைக்காட்சிகளால் படம் பார்க்கவரும் ரசிகனை சந்தோஷப்படுத்தி அனுப்பும் ஜாக்கிக்கு நிகர் அவரே தான். இன்று பிறந்தநாள் காணும் இந்த உலக சூப்பர் ஸ்டாருக்கு poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments