வாலு படத்தில் யூ ஆர் மை டார்லிங்...! ஹன்சிகாவைப்பார்த்து பாடிய சிம்பு!!!

29th of April 2014
சென்னை::வாலு படத்தில் சிம்பு-ஹன்சிகா இருவரும் இணைந்தபோதுதான் அவர்களுக்கிடையே திடீர் காதலும் உருவானது. ஏற்கனவே அவர் நயன்தாராவை காதலித்து அவர்கள் பிரிந்த கதையை பலரும் சொல்லியும், சிம்புவின் நற்குணங்கள்தான் என்னை அவர் பக்கம் ஈர்த்து விட்டது என்று சொல்லி அவர் மீதான காதலை வளர்த்துக்கொண்டார் ஹன்சிகா.
 
இதன்காரணமாக, அதன்பிறகு அவருக்கான மேல்தட்டு ஹீரோக்களின் படவாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இந்தநிலையில், திடீரென்று மலர்ந்த அவர்களது காதல், திடீரென்று என்று உடைந்தும் போனது. முதலில் காதலை ஹன்சிகா அறிவித்த நிலையில், காதல் முறிந்த கதையை சிம்பு அறிவித்தார். அதன்காரணமாக, அவர்கள் நடித்து வந்த வாலு படப்பிடிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
''யூ ஆர் மை டார்லிங்...'' என்று தொடங்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஓவராக அடம் பிடித்துக்கொண்டிருந்தார் ஹன்சிகா. இதனால் அப்படம் முடிவது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதையடுத்து நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்குப்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாடல் காட்சியில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்து நடித்துள்ளார் ஹன்சிகா.
 
ஆக, வாலு கரையேறுமா? ஏறாதா? என்று கண்விழி பிதுங்கிக்கொண்டு நின்ற அப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அடுத்தகட்டமாக படத்தை வெளியிடும் வேலைகளில் பரபரப்பாக இறங்கிவிட்டார்..
 

Comments