3rd of April 2014
சென்னை::நாளை சிம்புதேவனின் டைரக்ஷனில் அருள்நிதி நடித்துள்ள ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படம் ரிலீஸாகிறது. ‘உதயன்’, ‘மௌனகுரு’ என இதுவரை ஆக்ஷனில் மட்டுமே ‘தகராறு’ பண்ணிக்கொண்டிருந்த அருள்நிதி இதில் காமெடிக்கு மாறியிருப்பது படத்திற்கு ப்ளஸ்..
அடுத்ததாக பிந்துமாதவி. படத்தின் ஸ்டில்களில் பிந்துமாதவியை பார்க்கும்போதே புதிதாக தெரிகிறார். ‘கழுகு’, ‘தேசிங்குராஜா’ என சீரியஸ் முகம் காட்டிய பிந்துமாதவிக்கு இதில் விளையாட கிடைத்திருப்பது காமெடி களம். உதயம் படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டியும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பகவதியும் படத்திற்கு கூடுதல் பலங்கள்.
ஆனால் இந்த நேரத்தில் வெளியாக இருக்கும் மற்ற படங்களின் விளம்பரங்களை ஒப்பிடும்போது இந்தப்படத்திற்கான ப்ப்ளிசிட்டி குறைவாகவே இருக்கிறது. அதேபோல பாடல்களிலும் எதிர்பார்த்த துடிப்பு இல்லை. ஒரு பாடல் ஹிட்டானாலும் அதுவே 50% சக்சஸ் ஆன மாதிரி. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி சிம்புதேவனின் படம் என்கிற முத்திரை ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வந்து விடும் என்பதில் ஐயமில்லை....
Comments
Post a Comment