4th of April 2014
சென்னை::கழுகு நாயகி பிந்துமாதவிக்கு அதன்பிறகு அவர் நடித்த படங்களில் கேடி
பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா ஆகிய
படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனபோதும், அதன்பிறகு பெரிய அளவில் அவருக்கு
படங்கள் இல்லை. வழக்கம்போல் மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன்தான் டூயட்
பாடிக்கொண்டிருக்கிறார்.
அருள்நிதியுடன் ஒரு
கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் நடித்திருப்பவர், அடுத்து விஷ்ணு,
நகுல் போன்ற நடிகர்களுடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி
மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் நடிகர்களுடன் நடிப்பதால்
பிந்துமாதவியின் மார்க்கெட்டும் சூடு குறைந்து விட்டது.
இதுபற்றி
அவரைக்கேட்டால், சினிமாவைப்பொறுத்தவரை வெற்றிதான் நடிகர்-நடிகைகளின்
மார்க்கெட்டை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் நான் நடித்த பல படங்கள்
தொடர்ந்து ஹிட்டடித்தபோதும், என்ன காரணமோ மேல்தட்டு நடிகர்களின் படங்கள்
எனக்கு கிடைக்கவில்லை. அதனால் கைவசமுள்ள படங்களில் சிறப்பாக நடித்து
அடுத்த கட்டத்துக்கு சென்று விட வேண்டும் என்று வெறும் ரொமான்டிக்
மட்டுமின்றி, பர்பாமென்ஸ் ரீதியாகவும் கைவசமுள்ள படங்களில்
நடித்திருக்கிறேன்.
அதனால், இந்த படங்களில் என்
நடிப்பு கண்டிப்பாக பேசப்படும் என்று சொல்லும் பிந்துமாதவி, என்னதான்
நடிகைகள் சிறப்பாக நடித்தாலும் பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும்போதுதான்
அவர்களின் வேல்யூ கூடுகிறது. அதனால் இனி முன்னணி ஹீரோக்களின் பாடங்களாக
தேடிப்பிடித்து நடிப்பேன் என்கிறார்....
Comments
Post a Comment