லண்டனைச் சேர்ந்த காதலனுடன் சுற்றும் எமி ஜாக்சன்!!!

22nd of April 2014
சென்னை::ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த ஆங்கிலேயே பெண். மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க வந்தவரை ஷங்கர், ஐ படத்தில், சென்னை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். (ரஜினியையே வெள்ளைக்காரராக மாற்றியவருக்கு இதெல்லாம் சாதாரணம்) எமி தற்போது இந்திப் படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
எமி நடிக்க வருவதற்கு முன்பே லண்டன் தொலைக்காட்சியில் காரனேஷன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் தொகுப்பாளர் ரியான் தாமஸ் என்பவரை காதலித்து வந்தார். சினிமாவில் நடிப்பதில் பிசியாகிவிட்டதால் சில காலம் அவரை சந்திக்காமல் இருந்தார். இப்போது ஐ படம் முடிந்துவிட்டதால் லண்டன் பறந்த அவர் சில நாட்களாக காதலனுடன் லண்டன் வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பார்ட்டிகளில் தாமசுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளிவந்திருக்கிறது.
 
எமியின் காதலர் ரேயான் தாமஸ் லண்டனில் சினிமா ஸ்டார் அளவுக்கு பாப்புலரானவர். எமி, தவிர அவருக்கு இன்னும் சில காதலிகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்..
’’

Comments