11th of April 2014
சென்னை::கார்த்தி வெளியேறிய படத்தில் விஷால் நடிக்கிறார். சூர்யா நடித்த ‘சிங்கம் 2‘ படத்தை இயக்கிய ஹரி அடுத்து அவரது தம்பி கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க எண்ணி இருந்தார். அவரை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் உருவாக்கினார். ஆனால் கார்த்தி திடீரென்று அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதையடுத்து விஷாலை வைத்து படத்தை இயக்க முடிவு செய்தார். இதுபற்றி விஷாலிடம் பேசியபோது நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்துக்கு ‘பூஜை‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘பாண்டியநாடு‘, நான் சிகப்பு மனிதன்‘ படத்தை தயாரித்த விஷாலே இதையும் தயாரிக்கிறார். இதில் சத்யராஜ், கவுசல்யா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்...
Comments
Post a Comment