பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா

9th of April 2014
சென்னை::சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்தார் தமன்னா. யார் கண் பட்டதோ தெரியவில்லை...அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துவந்தநிலையில் திடீரென காணாமல் போனார். பிறகு தெலுங்கில் பிஸியான தமன்னா, சில வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடித்தார். அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைப்பெற்றும் தமன்னாவுக்கு பெரிதாக நன்மைவிளையவில்லை.
 
இந்நிலையில், தற்போது, தமிழ்ப்பட இயக்குநர்களின் பார்வை தமன்னாவை நோக்கி திரும்பி உள்ளது. கூடவே ஹீரோக்களின் பார்வையும்..! சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகி வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ். எம், கார்த்தியை வைத்து இயக்கிய அழகுராஜா படத்தின் படு தோல்வி காரணமாக கவிழ்ந்துபோனார். அவருக்கு லைஃப் கொடுக்கும் எண்ணத்தில் தன்னுடைய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் பாஸ் (எ) பாஸ்கரன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார் ஆர்யா.
 
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளார் என முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது கிடைத்த செய்தியின்படி.. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். இருவரும் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.
 
இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, "பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது. அந்த கலகலப்பான நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 
இனி, கொஞ்சகாலத்துக்கு ஆர்யா உடன் நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி தமன்னாவைப் பார்க்கலாம்!....
 

Comments