ஊன்றுக்கோளுடன் வந்து ஓட்டுப் போட்ட நடிகர் சூர்யா!!!

24th of April 2014
சென்னை::இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள். அதேபோல, திரையுலக பிரபலங்களும்.>>>


இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள். அதேபோல, திரையுலக பிரபலங்களும் தங்களது கடமையை நிறைவேற்றும் விதமாக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட அனைவரும் சென்னையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சென்னை, தியாகராயா நகரில் வசிக்கும் நடிகர் சூர்யா, இன்று காலை 12 மணிக்கு, இந்தி பிரச்சாரா சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது தந்தையும் நடிகருமான சிவகுமார், மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

நடிகர் சூர்யா வரும் போது, ஊன்றுகோல் துணையுடன் வந்தார். அஞ்சான் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தினால், சூர்யாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் சூர்யா, ஓட்டுப் போடுவதற்காக ஊன்றுக்கோலுடன் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார்

Comments