அனைத்து ஹீரோக்களுடனும் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பேன்: லட்சுமிமேனன் அதிரடி!!!

4th of April 2014சென்னை::நான் குடும்ப குத்துவிளக்கு என்று தன்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு நடித்து வந்தவர் லட்சுமிமேனன். அதனால் மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கிறபோதுகூட அவரிடம் கிளாமர் பற்றி வாய்திறக்க டைரக்டர்கள் தயங்கினர். ஆக, அதுவே லட்சுமிமேனனின் பாலிசியாகவும் மாறிவிட்டது. இருப்பினும் நான் சிகப்பு மனிதன் படத்தில் அதற்கு நேர்மாறான வேடத்தை அவருக்கு கொடுத்து பரபரப்பை உண்டு பண்ணி விட்டார் விஷால்.
 
முதலில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று மட்டுமே பட்டும் படாமலும் லட்சுமிமேனனிடம் சொன்னவர், பின்னர் படப்பிடிப்பு நடந்தபோது அது உதட்டு முத்தக்காட்சி என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதற்கடுத்து, தண்ணீருக்குள்ளும் ஒரு சூடான காட்சி உள்ளது என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தவர், அடுத்தடுத்து அந்த காட்சிகளையும் படமாக்கி படத்துக்கே பரபரப்பு கூட்டியிருக்கிறார்.
இந்தநிலையில், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? இல்லை மற்ற ஹீரோக்களுடனும் நடிப்பீர்களா? என்று லட்சுமிமேனனிடம் கேட்டபோது, முத்தக்காடசி வேண்டுமா, வேண்டாமா? என்பதை கதையும், காட்சிகளும்தான் முடிவு செய்கின்றனர். அந்த வகையில், கதைக்கு அவசியம் தேவை என்கிறபேது எல்லா ஹீரோக்களுடனும் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.
லட்சுமிமேனனின் இந்த ஓப்பன் ஸ்டேட்மென்ட் காரணமாக, அவரை வைத்து அடுத்தடுத்து படம் பண்ணும் டைரக்டர்களும் பொங்கி எழுந்து விடடனர். தங்கள் கதைக்கு முத்தக்காட்சியே தேவையில்லை என்றபோதும், அந்த மாதிரி சீன்களை கதைக்குள் திணித்துக்கொண்டிருக்கின்றனர். ஆக, கோலிவுட்டின் நம்பர்ஒன் பர்பாமென்ஸ் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட லட்சுமிமேனன், நம்பர்ஒன் முத்த நடிகையாக உருவெடுத்து நிற்கிறார்...

Comments