7th of April 2014
சென்னை::இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நாளிதழில் போலீஸ் ஸ்டேஷனே இல்லாத, பல வருடங்களாக போலீஸாரே கிராமத்துக்குள் நுழையாத அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தை பற்றி சொல்லியிருந்தார்கள். கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு கதைக்களம் தான் அருள்நிதி தற்போது நடித்துவரும் படமான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’.

புதியவரான ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இந்தப்படத்தில் குற்றங்களே நடக்காத ஒரு கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக அருள்நிதி இருக்கிறார். திடீரென சில சம்பவங்கள் எதிர்பாராத விதமாக நடைபெறும்போது நிலைமை என்ன ஆகிறது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார்களாம்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் அருள்நிதியுடன் காமெடி கூட்டணி அமைத்திருந்த பகவதி பெருமாள் இந்தப்படத்திலும் கூட்டணியை தொடர்கிறார். இந்தப்படத்தில் ரஜின் என்கிற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா...
Comments
Post a Comment